போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கிளிநொச்சி பாரதி வித்தியாலய பழைய மாணவர்களினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாரதிபுரம் சூசைப்பிள்ளையார் சந்தியிலிருந்து பாடசாலை மைதானம் வரை குறித்த கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தொடர்ந்து, நடப்புக்கிண்ண கிரிக்கட் போட்டியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.