பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அரச பாடசாலைகளில் உள்ள கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு, அரசாங்கம் இதுவரை தீர்வு வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த சங்கம் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் குமுது கட்டபொலுகே தெரிவித்துள்ளார்.
இதன்போதும் எவ்வித தீர்வுகளும் முன்வைக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் தொடர் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.