ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழு எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை இத்தேர்தலுக்கு பயன்படுத்த முடியும் எனவும் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.