இன்று(30) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் பிரகாரம் இந்த கட்டண குறைப்பு அமுல்படுத்தப்படும் என சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்
அத்துடன் பேருந்து கட்டணம் 5.27% ஆக குறைக்கப்படும் எனவும் இதன் காரணமாக குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 28 ரூபாவாக குறையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் சில சுற்றறிக்கைகளை கொண்டு வந்து இந்த போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றியுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் பேருந்துக் கட்டணக் குறைப்பின் 100% பலனைப் பெற வேண்டுமானால், பயணிகள் கட்டாயமாக பணத்தினை சில்லறை நாணயங்களாக மாற்றி கொண்டு வர வேண்டும்.
30 ரூபாயாக இருந்த பேருந்து கட்டணம் 28 ரூபாயாக மாற்றப்படுவதால் எஞ்சிய இரண்டு ரூபாய்க்கு சிக்கல் நிலை ஏற்படும்.
வெவ்வேறு பேருந்து கட்டணத்தின் போது இந்த இரண்டு, மூன்று மற்றும் ஐந்து ரூபாய் போன்ற நாணயங்களை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.