EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Jaffna யாழ்.வலய கல்வி பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு.

Jaffna யாழ்.வலய கல்வி பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு.

ஆடி 2, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிமனையில் இருந்த சைவக்கடவுள்களின் திருவுருவப்படங்களை அகற்றிய கல்விப் பணிப்பாளர் பிறட்லீயை உடனடியாக யாழ் கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிவசேனையின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண வலையக் கல்விப் பணிப்பாளராக கடந்த வாரம் பொறுப்பேற்ற பிரட்லீ தனது அலுவலகத்தில் இருந்த சைவக்கடவுள்களின் திருவுருவ படங்களை அகற்றினார்.

சுவாமி படங்கள் அகற்றப்பட்டமை அலுவலகத்தில் கடமையில் இருந்த இந்து சமய உத்தியோகஸ்தர்களிடையே கடும் அதிருப்தி நிலை காணப்பட்டதுடன் சர்ச்சைகளையும் ஏற்படுத்தின.

அது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்திய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுவாமி படங்களை மீள உரிய இடங்களில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையிலையே சிவசேனை அமைப்பினர் வலய கல்வி பணிப்பாளரை யாழ்.கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

கடமையாற்ற வந்த உடனேயே இவர் நடந்து கொண்டதிலிருந்து, இப்படிப்பட்ட மதவாத சிந்தனை உடைய இவரினால் நேர்மையானதொரு சேவையினை யாழ் கல்விப் புலத்திற்கு வழங்க முடியாது என்பது தெளிவாகவே புலப்படுகிறது.

இவரினால் இந்து மாணவர்கள், இந்து ஆசிரியர்கள், இந்து பாடசாலைகள் என்று பலதரப்பு பல வகையினில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகளவிலேயே உள்ளது.

அவரது மதவாத மனநிலை சார்ந்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு, இடமாற்றத்தோடு கூடிய தகுந்த தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.

இந்துக் கடவுள்களினை அவமதித்ததனால் உலக இந்து மக்களிடம் முறையாக ஊடகங்கள் வாயிலாக பொது மன்னிப்பும் கேட்க வேண்டும் – என சிவசேனையினர் கோரியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பூஸ்ஸ சிறையில் குழப்பம் விளைவித்த கைதிகள்
இலங்கை

பூஸ்ஸ சிறையில் குழப்பம் விளைவித்த கைதிகள்

தை 17, 2026
நாட்டில் பதிவான வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை

நாட்டில் பதிவான வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

தை 17, 2026
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு
அண்மைய செய்திகள்

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு

தை 17, 2026
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவைகள்
அண்மைய செய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவைகள்

தை 17, 2026
நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது
இலங்கை

நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது

தை 17, 2026
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
இலங்கை

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து

தை 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

இலங்கை சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட  ஸ்கேனர்கள்

இலங்கை சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட ஸ்கேனர்கள்

5 நாட்கள் முன்னர்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

5 நாட்கள் முன்னர்
யாழில். வாகன விபத்து

யாழில். வாகன விபத்து

4 நாட்கள் முன்னர்
தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் –  ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல்

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல்

5 மணத்தியாலங்கள் முன்னர்
நெடுந்தீவில் 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

நெடுந்தீவில் 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In