ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையில் தமிழ் பொது வேட்பாளர் வாய்ப்புக்களும் வகிபாகங்களும் என்ற தலைப்பில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
சட்டத்தரணி விஜயராணி சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை போராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான ம.நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்ட மாவட்டத்தின் பொது அமைப்புக்கள் சார்ந்தோர், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.