சுவிஸில் இருந்து வவுனியாவுக்கு வருகை தந்து கனகராயன்குளம் சின்னடம்பன் பகுதியில் வீடு ஒன்றில் தங்கி இருந்த நபரொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா வெடிவைத்தகல்லை சொந்த இடமாகவும் சுவிசில் வசித்து வந்தவருமான செல்லத்துரை நிமலநாதன் (வயது 66) என்பவர் கோவில் திருவிழா காரணமாக சின்னடம்பன் கிராமத்தில் தனது உறவினரின் வீடு ஒன்றில் தங்கி இருந்தபோதே இன்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரும் புதிதொரு நபரும் கோவில் திருவிழாவிற்கு சென்று பின்னர் தமது உறவினரின் வீட்டில் தனியாக தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இரவு வீட்டுக்குள் புகுந்த குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டதோடு அங்கு இருந்த ஒருவரை வீட்டின் வெளியே கொண்டு சென்று எறிந்த பின்னர் மற்றையவரை வீட்டுக்குள் வைத்து கொலை செய்து தப்பி ஓடியதாக தெரிய வருகிறது.
இச்சம்பவம் இன்று காலை நான்கு மணியளவில் இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வருவதோடு இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலீசார் முன்னெடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பதில் நீதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி தி. திருவருள் சென்று சடலத்தை பார்வையிட்டிருந்தார்