சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் வீதிச் சோதனையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனத்தின் சூட்சுமான முறையில் வாகனத்தின் அடிப்பகுதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட பெறுமதி மிக்க பாலை மரக்குற்றிகள் 32 இதன்போது பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கப்ரக வாகனமும், அதன் சாரதியும் பொலிஸார் கைது செய்யவுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மரக்குற்றிகள், கப்ரக வாகனம் மற்றும் சந்தேக நபரையும் 27.08.2024 அன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.