பொலிசாரின் பாதுகாப்புடன் முல்லைத்தீல் இன்றும் இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் (04) ஆரம்பமாகியது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் நேற்று (04) சுமூகமாக ஆரம்பமாகிய நிலையில் பொலிசாரின் பாதுகாப்புடன் இன்றும் (05) இரண்டாவது நாளாக சுமூகமாக நடைபெற்றுவருவதுடன் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகம் மற்றும் துணுக்காய் வலயக்கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் உத்தியோகத்தர்கள் தமது தபால் வாக்குகளை அளித்துவருகின்றனர்
இதேவேளை இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அரச திணைக்களங்கள் இராணுவ முகாம்களில் உள்ள வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று தமது தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 3566 பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது