EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கொழும்பில் மனித புதைகுழி – காணாமலாக்கப்படவர்களுடையதா?

கொழும்பில் மனித புதைகுழி – காணாமலாக்கப்படவர்களுடையதா?

புரட்டாதி 10, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

இங்குருகொட சந்தியில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி மண் தோண்டும் போது மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, புதுக்கடை நீதவான் முன்னிலையில், கடந்த ஐந்தாம் திகதி புதைகுழி தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அண்மையில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட பாரிய புதைகுழிகளை அகழ்வாராய்ச்சி செய்த தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவா இந்த பாரிய புதைகுழியில் அகழ்வாராய்ச்சி பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

எவ்வாறாயினும், குறித்த மனித புதைகுழியின் வயது குறித்து இதுவரை எதுவும் ஊகிக்க முடியாது என பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாம் இன்னும் எலும்புக்கூடு நிலையை அடையவில்லை, நாங்கள் மேலே இருந்து கீழ் நோக்கிச் செல்கிறோம். எலும்பு வார்ப்புரு நிலையை அடைய இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தகவல்படி, இது நாட்டில் தோராயமாக கண்டுபிடிக்கப்பட்ட 22வது பாரிய மனித புதைகுழி ஆகும்.

88மற்றும்89காலப்பகுதிகளில் காணாமல் போனவர்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை, ஏனெனில் உண்மையைக் கண்டறியும் விருப்பம் அரசாங்கங்களுக்கு இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கை முழுவதும் பரந்து கிடக்கும் பாரிய புதைகுழிகள் பற்றிய விரிவான அறிக்கையை ஐந்து உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வெளியிட்டன.

அத்துடன், மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம் (CHRD) “இலங்கையில் வெகுஜன புதைகுழிகள் மற்றும் தோல்வியுற்ற அகழ்வாராய்ச்சிகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 20 பாரிய புதைகுழிகளின் விரிவான தகவல்கள் மற்றும் வரைபடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மார்கழி 6, 2025
தெஹிவளையில் சற்று முன்  துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!
அண்மைய செய்திகள்

தெஹிவளையில் சற்று முன் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

மார்கழி 6, 2025
வெலிமடை மண்சரிவு – இரு உடல்கள் மீட்பு!
அண்மைய செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 611ஆக உயர்வு!

மார்கழி 6, 2025
கிறிஸ்து பிறப்பு விழா குறித்து யாழ் மறை மாவட்ட குரு முதல்வரின் அறிவிப்பு!
இலங்கை

கிறிஸ்து பிறப்பு விழா குறித்து யாழ் மறை மாவட்ட குரு முதல்வரின் அறிவிப்பு!

மார்கழி 6, 2025
யாழில் வெள்ள நிவாரணத்தில் ஊழல் இல்லை – ம.பிரதீபன்
இலங்கை

யாழில் வெள்ள நிவாரணத்தில் ஊழல் இல்லை – ம.பிரதீபன்

மார்கழி 6, 2025
மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள்
இலங்கை

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள்

மார்கழி 6, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

செட்டிகுளம் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டு பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

செட்டிகுளம் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டு பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

3 நாட்கள் முன்னர்
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ சேவைகளை வழங்கும்  மருத்துவர்கள்

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ சேவைகளை வழங்கும் மருத்துவர்கள்

6 நாட்கள் முன்னர்
மரக்கறிகளின் விலையில் மாற்றம்

மரக்கறிகளின் விலையில் மாற்றம்

5 நாட்கள் முன்னர்
இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடையாக வழங்கிய மாலைதீவு!

இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடையாக வழங்கிய மாலைதீவு!

2 நாட்கள் முன்னர்
கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In