நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கடந்த சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார் வாகன திருத்தும் இடத்திற்கு வழி தவறி சென்ற நிலையில் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் நீர்நாய் வகையைச் சேர்ந்தது ஆகும். (Smooth-coated Otter) இது தோற்றத்தில் பெரிய உடலைக்கொண்டிருக்கிறது. இது பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக் கருதப்படுகிறது.