முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலினால் தமிழ் தேசியம் சிதைக்கப்படுகின்றது. சாதியாக மதமாக பிரதேசமாக தமிழ் இனம் பிளவுபட்டு காணப்படுகின்றது. இதனை தாண்டி தமிழ் தேசமாக ஒருங்கிணைப்பதற்கு தமிழ் பொது வேட்பாளர் மிகவும் அவசியமானதாகும் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் ஊடக சந்திப்பு தமிழ் தேசிய பொதுக் கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.