கொழும்பில் சந்தேக நபரான பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
பாரிய காணி ஆவண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
150 மில்லியன் ரூபா பெறுமதியான காணிக்கு போலியான ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை கையகப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த பெண் வேறு ஒருவரைப் போன்று அடையாளப்படுத்தி போலியான பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தொடர்பில் தகவல்கள் தெரிவித்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார், மக்களை கேட்டுள்ளனர்.
சந்தேக நபரான பெண்ணின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்