கிளிநொச்சி ஏ-09 வீதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று(20.09.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.