வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில் வவுனியா பிரதேசசெயலகமும் பிரதேசகலாசார பேரவையும் இணைந்து நடத்தும் பிரதேச கலாசாரவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இரண்டு பிரிவுகளாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் காலை 9மணி தொடக்கம் 12மணி வரை அமரர் கிருஷ்ணபிள்ளை உதயகுமார் நினைவு அரங்கிலும், மாலை2மணி தொடக்கம் 5 30 மணிவரை சின்னப்பு சுபாஷ்சிங்கம் நினைவு அரங்கிலும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
காலைஅரங்கு பிரதேசகலாச்சார பேரவையின் உப தலைவர் நாகலிங்கம் தியாகராஜா தலைமையில் இடம்பெறவுள்ளதோடு பிரதமவிருந்தினராக வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரையும் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ராமசாமி சுப்பிரமணியமும் தமிழ்மாமன்ற தலைவர் வைத்தியர் செல்வராஜா மதுரகனும், கௌரவ விருந்தினர்களாக விரிவுரையாளர் திருமதி கிருபாகரியோக ராஜாவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாலை அரங்கு வவுனியா பிரதேச செயலாளரும் கலாசார பேரவையின் தலைவருமான நாகலிங்கம் கமலதாசன் தலைமையில் இடம்பெறவுள்ளதோடு பிரதம விருந்தினராக தமிழ்மணி அகளங்கன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை உதவிக்கல்வி பணிப்பாளர் திருமதி வேல்விழி சூரியகுமாரும் கௌரவ விருந்தினராக நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி அதிபர் திருமதி சூரியயாழினி வீரசிங்கமும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பிரதேச கலாசாரபேரவை கேட்டு நிற்கின்றது.











