வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் 25 பேர் இம்முறை வெளிவந்துள்ள சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் ஒன்பது பாடங்களில் விசேட சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பாடசாலையின் பெறுபேறுகளில் மாணவர்கள் உயர்வை வெளிப்படுத்தி வரும் நிலையில் தற்போதும் அதிகளமான மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தியை பெற்றுள்ளதோடு 16 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்தியையும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.