புத்தளம் – தப்போவ பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து ஒருதொகை வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் நேற்று சனிக்கிழமை (5) விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், கடற்படையினரும், விஷேட அதிரடிப்படையினரும இணைந்து மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த சிகரட்கள் , விற்பனை செய்ய தயாராக இருந்த போது , சந்தேக நபர் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்த வெளிநாட்டு சிகரட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 101 வெளிநாட்டு சிகரட் பெட்டிகள் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் , அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கருவலகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் விஷேட அதிரடிப் படையினர் குறிப்பிட்டனர்.











