கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து மாணவி ஒருவர் தவறி வீழ்ந்துள்ளார். சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு தாமரை கோபுரத்தின் பார்வை கூடத்திலிருந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் உயிரிழந்த மாணவிக்கு 18 – 20 வயத்திற்க்கு உட்பட்டு காணப்படுவதுடன், மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகளை தாமரை கோபுரத்தின் சீ.சீ.ரீ.வி காணொளிகளின் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.