மக்கள் போராட்ட முன்னணி மட்டக்களப்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு நேற்று செவ்வாய்க்கிழமை (9) முன்னணி சோஸலிச கட்சி மத்தியகுழு உறப்பினர் கிருபாகரன் தலைமையில் தாக்கல் செய்துள்ளது.
முன்னணி சோசலிச கட்சி, புதிய மார்க்கிச லெலின் கட்சி(செந்தில்வேல்), சோசலிச மக்கள் கட்சி, அறக்கல போராட்டத்தில் முன்னின்ற இடதுசாரி அமைப்புக்கள் ஒன்றினைந்த கூட்டணியான மக்கள் போராட்ட முன்னணி கட்சியான குடை சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டதில் முன்னணி சோஸலிச கட்சி மத்தியகுழு உறுப்பினர் கிருபாகரன் தலைமையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.





