EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்- சிவானந்தராசா கோரிக்கை

எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்- சிவானந்தராசா கோரிக்கை

ஐப்பசி 13, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) கனிசமான ஆசனங்ளை பெற்றுக் கொண்டு ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம் எனவே வீணைச் சின்னத்தில் போட்டியிடும் எங்களுக்கு வாக்களித்து எங்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என மட்டக்களப்பு மக்களை அன்பாக கேட்டுக் கொள்கின்றோம் என ஈபிடிபி கட்சி மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஈபிடிபி காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தலும் ஊடக மாநாடும் இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் மாவட்ட அமைப்பாளரான மாமா என்றழைக்கப்படும் தம்பிப்பிள்ளை சிவானந்தராசா தலைமையில் கொக்கட்டிச்சோலை முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் பாக்கியராசா பாஸ்கரன், அன்ரனி சில் ராஜ்குமார், தம்பிராசா ஆனந்தராசா, கிருஸ்ணபிள்ளை மதனகுமார், புனிதாசன் சிறீக்காந், புதுமலசிங்கம் அருணஉதயன், இராசையா லில்லி ஜெயராணி ஆகிய 8 புதிய வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைத்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) கட்சி வடக்கு கிழக்கு அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் கொழும்பு மாவட்டம் உள்ளடங்கலாக தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

1994 ம் ஆண்டில் இருந்து நாங்கள் இன்று வரை சகல மாவட்டங்களில் தேர்தல் களத்தில் இருந்தோம் அந்த வகையில் இந்த முறையும் தேர்தலில் தூய உள்ளம் கொண்ட வேட்பாளர்களை தெரிவு செய்து போட்டியிடுகின்றோம். நாங்கள் வட மாகாணத்தில் கிடைத்த ஆசனத்தை வைத்துக் கொண்டு பல வேலைத்திட்டங்னை செய்தோம்.

அந்த வகையில் மீனவர்களுக்கான மானியங்கள் வழங்கிருந்தோம். இந்த நிலையில் ஜனாதிபதி தோர்தல் இடம்பெற்று ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளது. ஆனால் நாங்கள் ஆரம்பித்த வேலைத்திட்டம் இடைநடுவில் விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எமது கட்சி செயலாளர் டக்கிளஸ் தேவானந்த தொடங்கிய வேலையை முடிக்க வேண்டும் என தற்போதைய ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார் அது கட்டாயமாக நடைபெறும்.

இருந்தபோதும் இவ்வளவு காலமும் தமிழ் தேசியம் என பேசிக் கொண்ட அரசியல்வாதிகளால் மக்களின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் எதுவும் நடந்ததில்லை ஆனால் நாங்கள் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகளை செய்து வந்திருக்கின்றோம்.

மாவட்ட மக்களுக்கு அன்பான வேண்டுகோள். ஈபிடிபி பரந்துபட்ட வேலைத்திட்டத்தை முன் உதாரனமாக கொண்டு இந்த தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ளது எனவே இந்த முறை வீணைச் சின்னத்தில் போட்டியிடும் எங்களுக்கு வாக்களித்து எங்களை வெற்றிபெறச் செய்வதன் மூலம் மாவட்ட அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை செய்யமுடியும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

தை 12, 2026
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

தை 12, 2026
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

தை 12, 2026
நைனாமடை பாலத்தினருகில் மிதந்த நிலையில் யுவதி சடலமாக மீட்பு!
இலங்கை

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

தை 12, 2026
மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

தை 12, 2026
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!
அண்மைய செய்திகள்

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

தை 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில். கடலின் சீற்றம் அதிகரிப்பு

யாழில். கடலின் சீற்றம் அதிகரிப்பு

2 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம்

3 நாட்கள் முன்னர்
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

9 மணத்தியாலங்கள் முன்னர்
மிளகாய் வகைகளின் விலை அதிகரிப்பு

மிளகாய் வகைகளின் விலை அதிகரிப்பு

1 நாள் முன்னர்
லஞ்ச் சீட் பாவனைக்கு  தடை விதிப்பு

லஞ்ச் சீட் பாவனைக்கு தடை விதிப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In