வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரையில் மதுபோதையில் கடலில் நீராடச் சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய பொலிசார் மீது தாக்குதல் நடாத்தியதில் இரு பொலிஸார் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்ட ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை (12) மாலையில் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை செவனபிட்டியாவைச் சேர்ந்த குழுவினர் சம்பவதினமான நேற்று பகல் உல்லாச பயணம் மேற்கொண்டு பாசிக்குடா கடற்கரையில் பொழுதை போக்கி கொண்டதுடன் அங்கு மதுபானம் அருந்திய பின்னர் கடலில் நீராட முயற்சித்தபோது அங்கு காவல் கடமையில் இருந்த பொலிசார் மதுபோதையில் நீராடகூடாது கடல் ஆபத்தானது உயிருக்கு ஏதாவது நடக்கும் எனவே மது போதை இல்லாத நிலையில் தாராளமாக நீராடமுடியும் என தெரிவித்து அவர்களை தடுத்தனர்.
இதன்போது மதுபோதையில் இருந்தவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் மீது மதுபோதையில் இருந்தவர்கள் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து இரு பொலிசார் காயமடைந்ததையடுத்து அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்பட்டதையடுத்து தாக்குதலை மேற்கொண்ட ஆண் ஒருவரை கைது செய்தனர்
பொலிசாரின் கடமைக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.