வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஏ.றொஜன் அவர்களின் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர் போராளி யசோதினி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இளைஞர்களின் ஏகோபித்த தெரிவாக மன்னார் மாவட்டத்தின் இளம் வேட்பாளர் றொஜன் இருப்பதாகவும், அவரை வெற்றி பெற வைப்போம் என இந்தக் கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட இளைஞர்கள் திட்டவட்டமாக கூறியிருந்தார்கள்.
அவர் மக்களுக்கு ஆற்றி வருகின்ற சேவைகள் குறித்து கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சி தெரிவித்ததோடு,அவரின் வெற்றிக்காக பாடுபட உள்ளதாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக பின் தங்கிய கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.