மாத்தறையில் துப்பாக்கி சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கெக்கனதுர பகுதியில் அடையாளம் தெரியாத நபரால் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் துப்பாக்கி சூட்டிற்க்கு இலக்கான நபர் லீசிங் கம்பனியொன்றில் “வாகனம் பறிமுதல் செய்பவர் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் முச்சக்கரவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த போது, காரில் வந்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.