வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, புதுடில்லியில் இருந்து சிகாகோ நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இக்கலூட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானம் 127 உள்ளூர் நேரப்படி சுமார் 5:21 மணிக்கு தரையிறங்கியது, விமானத்தில் இருந்த 211 பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்து வெளியேறி இகலூயிட் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றனர்.
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து
விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது எனவும் வெடிகுண்டு மிரட்டல் அச்சுறுத்தல் விலகும் வரை விமானம் பறக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இக்கலூயிட் விமான நிலையம் மற்றும் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
வேறு எந்த விமானங்களும் கனடாவிற்கு திருப்பி விடப்பட்டது அல்லது மற்ற இந்திய விமானங்கள் வேறு இடத்திற்கு திருப்பி விடப்பட்டது குறித்து தங்களுக்கு தெரியாது என்று போலீசார் தெரிவித்தனர்.
கனேடிய மண்ணில் சுதந்திரமான சீக்கிய அரசைக் கோரும் காலிஸ்தானி ஆதரவாளர்கள் உட்பட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் எதிரிகளை கிரிமினல் இலக்காகக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், கனடாவும் இந்தியாவும் தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய ஒரு நாளுக்குப் பிறகு ஏர் இந்தியா இக்கலூட்டில் தரையிறங்கியது குறிப்பிட்ட தக்கது.
வெடிகுண்டு மிரட்டலுக்கு யார் காரணம் என இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே பறந்து கொண்டிருந்த மற்றொரு ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந்த சம்பவம் கனேடிய வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக பதிவாகி உள்ளது.