இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை லேக் ஷோர் பவுல்வர்டில்(Lake Shore Boulevard) ஒரு வாகனம் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து ஒன்டாரியோ டிரைவ் அருகே கிழக்கு நோக்கிய வீதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்து தொடர்பில் டொராண்டோ பொலிசார் கூறுகையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதுவதற்கு முன்பு கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதியுள்ளது என குறிப்பிட்ட அதேவேளை .மோதலின் தாக்கம்காரணமாக மின் கம்பம் கீழே விழுந்து வாகனத்திற்கு “பாரிய ” சேதத்தை ஏற்படுத்தியது எனவும் குறிப்பிட்டார்.
இந்த விபத்தின் விசாரணைகளுக்காக நெடுஞ்சாலையின் சில கிழக்குப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.மேலும் இவ் விபத்துக்கு வேகம் காரணமா என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.