இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று(23) இந்த சந்திப்பு நடைபெற்றது.
இலங்கையின் சமூகப் பாதுகாப்பு முறைமையை வலுப்படுத்துதல், பெண்களின் தொழில்முயற்சியை ஊக்குவித்தல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறையின் முக்கியத்துவம் உட்பட அபிவிருத்தியின் முக்கிய பகுதிகள் குறித்து இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் அபிவிருத்திக்கு கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்











