யாழில் நேற்று (27) நீதிமன்ற உத்தரவுக்கமைய விசேட அதிரடிப்படையினரால் மேலும் இரு குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளது. பரித்தித்துறை உத்தரவுக்கமைய குண்டுகளை செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக பாவனையின்றி காணப்பட்ட வளாகத்தின் கிணற்றில் இருந்து அதிகளவான கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை துறைமுகத்தை அண்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்க்கு பின்புறமாக இருந்த குறித்த காணியின் பாவனையற்ற கிணற்றை துப்பரவு செய்யும் போது இக் குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (26) சனிக்கிழமை காலை இக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
யுத்தம் காரணமாக 35 வருடங்களாக பாவனையற்றிருந்த காணியில் இருந்த கிணற்றிணை துப்பரவு செய்த போது 11 வரையான கையெறி குண்டுகள் கிணற்றில் இருந்த கழிவுகளை வெளிக் கொணர்ந்த போதே இக் கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளன.
இதணையடுத்த காணி உரிமையாளரால் பருத்தித்துறை பொலிஸாருக்கு கிணற்றில் கைக்குண்டுகள் இருப்பது தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைக்குண்டுகளை நீதிமன்ற அனுமதியைப் பெற்று அகற்றும் வரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.