வெலிமடை, நுவரெலிய வீதியில் இன்று (07) காலை முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சீன பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதியான 36 வயதுடையவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த குறித்த நபர் வெலிமடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லொறியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.