ஏறாவூர் நகரில் தேர்தல் சட்டவிதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரெலிபோன் சின்ன ஆதரவாளர்கள் 4 பேரை துண்டுபிரசங்களுடன் இன்று வியாழக்கிழமை (7) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
ஏறாவூர் நகரில் சம்பவதினமான இன்று பகல் 1 மணியளில் ரெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் சகிதம் அதிகமானவர்கள் ஆதரவு கோரி துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக பொலிசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிசார் அங்கு சென்ற நிலையில் தேர்தல் சட்டத்தை மீறி குறித்த கட்சியின் இரு வேட்பாளர்களுடன் அவர்களது ஆதரவாளர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததையடுத்து 4 பேரை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 175 துண்டுபிரசுரங்களையும் ஒரு நோட்டிஸ் கைப்பற்றினர்.
இதில் கைது செய்யப்பட்வர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இருந்து அழைப்பானவரும் போது நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.