பெரும்பான்மையான மக்கள் அநுர குமார திஸாநாயக்கவை விரும்பவில்லை என்பதுதான் உண்மை என்று அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்தார்.
42 வீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக வந்த முதலாவது பலவீனமான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கதான் என்று தான் நினைப்பதாகவும் அவர் கூறினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார தரப்பினர் சந்திக்கவுள்ள சவால்கள் குறித்தும் பேராசிரியர் இதன்போது தெளிவுபடுத்தினார்.