EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

கார்த்திகை 16, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை(16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனப்பிரச்சினை குறித்தும்,அபிவிருத்தி தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்துவதாக கோரி மக்களிடம் நாங்கள் வாக்கு சேகரித்தோம். குறித்த இரு விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுகின்ற ஒரு சாத்தியப்பாட்டை மேற்கொள்கின்ற சூழலை உருவாக்குவதாகவும் நாங்கள் கூறியிருந்தோம்.

குறித்த இரு விடயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம். கிராமிய ரீதியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து கிராமங்களை முன்னேற்றுவதே நோக்கமாக இருக்கும். மேலும் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை நாங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுவதற்கான ஒரு சூழலை நாங்கள் உருவாக்குவோம்.

மேலும் இம்முறை பாராளுமன்ற தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன்.

ஜனாதிபதி கூறியது போல் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து,காணாமல் போனவர்கள் குறித்து அவர்களின் உறவுகள் போராட்டத்தின் ஊடாக நீதியை கோரி வருகின்றனர்.

அவர்களுக்கு நியாயம் கிடைக்கின்ற வகையில் ஒரு வழி முறையை நாங்கள் கையாளுகின்ற ஒரு சூழலை உருவாக்குதல்,எமது நிலங்கள் பறிபோகாத ஒரு சூழலை ஏற்படுத்துதல்,எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

எனவே இம்முறை சங்கு சின்னத்துக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறையை நாங்கள் கையாளுவோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

 

தொடர்புடைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

மார்கழி 11, 2025
அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!
இலங்கை

அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!

மார்கழி 11, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
அண்மைய செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மார்கழி 11, 2025
தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

மார்கழி 11, 2025
தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு
இலங்கை

தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு

மார்கழி 11, 2025
முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
இலங்கை

முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

மார்கழி 11, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் முகாம்களில் தங்கியுள்ள 79 குடும்பங்கள்

வவுனியாவில் முகாம்களில் தங்கியுள்ள 79 குடும்பங்கள்

3 நாட்கள் முன்னர்
உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

7 நாட்கள் முன்னர்
வெள்ளத்தில் சிக்கிய சிறைக் கைதிகள்

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி

4 நாட்கள் முன்னர்
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

1 நாள் முன்னர்
அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In