கண்டி – தெல்தெனிய, தன்னலந்த பகுதியில் இன்று (20) காலை வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.
மண்மேடு சரிந்ததில் வீடு முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. கண்டி அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மண்மேட்டை அகற்றும் பணியை தற்போது ஆரம்பித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை வரை தொடர்ந்தும் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.