கனடாவில் குடியேறும் புதியவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம் ஒன்று ஒன்றாரியோ மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவிற்குள் புதிதாக வருவோர் ஏமாற்றப்படுவதனை தடுக்கவும் மோசடிகளில் சிக்குவதனை தவிர்க்கவும் இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு பிரதிநிதிகள் என்ற பெயரில் புதிதாக நாட்டுக்குள் வருகை தந்தவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஒன்ராறியோ அரசாங்கம் தெரிவித்துள்ளது
குடியேறுவதற்கும் தொழில்களை பெற்றுக் கொள்வதற்குமான போலி ஆவணங்களை வழங்கி புதியவர்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான மோசடிகளில் இருந்து புதியவர்களை பாதுகாக்கும் நோக்கில் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது.