இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சந்தையில் தற்போது நாட்டரிசி மற்றும் ஏனைய அரிசி வகைகளுக்கு நிலவுகின்ற பற்றாக்குறை மற்றும் கடும் மழையினால் நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது பொருத்தமானது என இனங்காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, உடன் அமுலாகும் வகையில் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.