EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சட்டவிரோத கட்டட உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

சட்டவிரோத கட்டட உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

மார்கழி 5, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன.

அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள இடர் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்களப் பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 302 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 37 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 44 பேரும், மன்னார் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 80 பேரும், வவுனியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 63 பேரும் மதிப்பளிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாம் எவ்வாறான தயார்படுத்தல்களுடன் இருந்தாலும் இடர்கள் வரும்போது சில வேளைகளில் அவற்றைச் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்படும். 4 நாள்களில் சுமார் 500 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றது. சகல இடங்களும் வெள்ளக்காடாகியது. ஆனாலும், சில நாட்களிலேயே வழமைக்கு திரும்பும் வகையில் நீங்கள் அனைவரும் பணியாற்றியிருக்கின்றீர்கள்.

உங்கள் வீடுகள் வெள்ளத்தில் மூழ்க்கியிருந்தாலும் நீங்கள் நித்திரை முழித்து இரவிரவாக மக்களைப் பாதுகாக்க களத்தில் நின்றிருக்கின்றீர்கள். அப்படிச் செயற்பட்ட உங்களை பாராட்டி மதிப்பளிப்பது எமது கடமை. இது உங்களுக்கு உற்சாகமளிக்கும்.

சவால்களை நாம் சந்திக்கும் போதுதான் எமது சேவைகள் இன்னமும் மேம்படும். இந்த இடரிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் எமது நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். நாம் அவற்றை மீளாய்வு செய்யவேண்டும்.

சரியான தீர்மானங்களை விரைந்து எடுக்கவேண்டும். தலைமைத்துவத்துக்கு அதுதான் அழகு. விரைந்து தீர்மானங்களை எடுக்கத்தவறினால் பிரச்சினைகளுக்குத்தான் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் பருவகால மழைக்கு முன்னதாக வெள்ளவாய்க்கால்களை துப்புரவு செய்வதை எமது வருடாந்த செயற்றிட்டத்தில் உள்ளடக்குவதன் ஊடாக முன்னாயத்த நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்கலாம்.

இதேவேளை மத்தி, மாகாணம் என்று பாராது இவர்கள் எமது மக்கள் என்ற அடிப்படையில் இந்த இடர் நடவடிக்கையின் போது சகல திணைக்களங்களும் செயற்பட்டன. அது வரவேற்கப்பட வேண்டியதுடன் தொடரவேண்டும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பூஸ்ஸ சிறையில் குழப்பம் விளைவித்த கைதிகள்
இலங்கை

பூஸ்ஸ சிறையில் குழப்பம் விளைவித்த கைதிகள்

தை 17, 2026
நாட்டில் பதிவான வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை

நாட்டில் பதிவான வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

தை 17, 2026
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு
அண்மைய செய்திகள்

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு

தை 17, 2026
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவைகள்
அண்மைய செய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவைகள்

தை 17, 2026
நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது
இலங்கை

நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது

தை 17, 2026
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
இலங்கை

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து

தை 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

வடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார் – தூதுவர் உறுதி

வடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார் – தூதுவர் உறுதி

3 நாட்கள் முன்னர்
தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் –  ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல்

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல்

6 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

5 நாட்கள் முன்னர்
கொழும்பு கங்காராம  விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு கங்காராம விகாராதிபதியை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In