EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
கிளிநொச்சி மாவட்ட மாபெரும்  தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல்.

கிளிநொச்சி மாவட்ட மாபெரும் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல்.

மார்கழி 6, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்று(06) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

கிளிநொச்சி பழைய மாவட்டச் செயலக வளாகத்தில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்.க.பகீரதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, தொழிற்சந்தை நிகழ்வினை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ந.இன்பராஜ், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ந.சந்தீபன், றகமா நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் இரா.சஞ்ஜெய்காந்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த தொழிற்சந்தையில் 40ற்கும் மேற்பட்ட அரசசார்பற்ற தனியார் நிறுவனங்கள், மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் கலந்துகொண்டு தொழில் வாய்ப்பினை வழங்கி வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் தேடும் இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதனை குறித்த வளாகத்தில் அவதானிக்க முடிகிறது.

குறித்த நிகழ்வு மாலை 3.30 மணி வரை நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் இருக்கின்ற வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக குறித்த தொழிற் சந்தையானது நடாத்தப்படுகிறது.

அந்த வகையில் மாவட்ட மட்டத்தில் உள்ள தொழில் வழங்கும் தனியார் நிறுவனங்களை அழைத்து, தொழில் தேடுபவர்களையும் தொழில் வழங்குநர்களையும் இணைத்து தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் சி.சிவசொரூபன், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில் துறையினை எதிர்பார்ப்பவர்கள், தொழிற் பயிற்சி பெறுநர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்த கடற்தொழில் அமைச்சர்
அண்மைய செய்திகள்

பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்த கடற்தொழில் அமைச்சர்

ஆனி 14, 2025
மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசம் காணப்படும் மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
அண்மைய செய்திகள்

மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசம் காணப்படும் மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

ஆனி 14, 2025
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை கடும் காற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தம்
அண்மைய செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை கடும் காற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தம்

ஆனி 14, 2025
வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும்
அண்மைய செய்திகள்

வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும்

ஆனி 14, 2025
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்.
அண்மைய செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்.

ஆனி 14, 2025
இரத்த தானம்
அண்மைய செய்திகள்

இரத்த தானம்

ஆனி 13, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக தமிழரசுகட்சியின் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக தமிழரசுகட்சியின் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு

4 நாட்கள் முன்னர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்.

15 மணத்தியாலங்கள் முன்னர்
மேலைத்தேய கலாசார நடவடிக்கைகள் எமது பிரதேசங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிப்பு !

மேலைத்தேய கலாசார நடவடிக்கைகள் எமது பிரதேசங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிப்பு !

4 நாட்கள் முன்னர்
யாழில். ஆலயங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

யாழில்.சட்டத்தரணி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றசாற்றின் அடிப்படையில் ஒருவர் கைது!

5 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In