EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
பிரிந்து நிற்பது பின்னடைவே – சுரேன் குருசாமி தெரிவிப்பு.

பிரிந்து நிற்பது பின்னடைவே – சுரேன் குருசாமி தெரிவிப்பு.

மார்கழி 7, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

பிரிந்து நின்று பயணிப்பது தமிழ்த்தேசிய அரசியலுக்கு பாதகமான சூழலை ஏற்ப்படுத்தும். அதனை இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் உணர்ந்துள்ளோம். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.

தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைகுழு கூட்டம் வவுனியா இரண்டாம்குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

கடந்ததேர்தலில் நாங்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக பேசியிருக்கிறோம். குறிப்பாக எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த்தேசியத்தை பாதுகாக்கும் முகமாக தமிழ்தரப்பில் இருக்கக்கூடிய அனைவரும் ஒருமித்து பயணிப்பது தொடர்பான விடயங்கள் இன்று கலந்தாலோசிக்கப்பட்டது.

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தென்னிலங்கையின் அலை பெரிதாக வீசப்பட்டு எமது இளைஞர்கள் அள்ளுண்டு போனதை நாங்கள் அவதானித்திருக்கிறோம். தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துகின்ற வாக்குகள் கணிசமானஅளவு வழங்கப்பட்டிருந்தாலும் எங்களது கட்சிகளுக்கிடையில் இருந்த பிரிவினைகள் தென்னிலங்கை கட்சிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அது அந்தகட்சிக்கு அதிக ஆசனங்களை பெறுவதற்கு வழிவகுத்துள்ளது.

ஆகவே பிரிந்துநின்று பிரிவினையுடன் பயணிப்பது எமது இனத்தினுடைய இருப்பிற்கும் எதிர்கால தமிழ்த்தேசிய அரசியலுக்கும் பாதகமான சூழலை ஏற்படுத்தும். அதனை இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் உணர்ந்துள்ளோம். இதனை சீர்செய்துகொண்டு தமிழ்த்தேசியப் பரப்பிலே பயணிக்கின்ற அனைவரையும் ஒருமித்துக்கொண்டு பயணிப்பது பற்றி கலந்துரையாடி இருக்கிறோம்.

இது தொடர்பாக மாவட்டரீதியகாவும் எமது கட்சி உறுப்பினர்களோடு பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். இன்னும் பலமான வகையில் மீள்கட்டுமானத்தினை செய்து எமது அரசியலை முன்னெடுக்க தயாராகஉள்ளோம். அத்துடன் கட்சிக்குள் நடந்த பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட ரீதியகாவும் கூட்டங்களை நடாத்தி அவற்றை ஆராய்வதாக தீர்மானித்துள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் –  வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்

தை 21, 2026
மீள பாடசாலைகள் ஆரம்பம்
இலங்கை

மீள பாடசாலைகள் ஆரம்பம்

தை 21, 2026
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்
இலங்கை

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்

தை 21, 2026
நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது
அண்மைய செய்திகள்

காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்த மாமானர் கைது

தை 21, 2026
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான  இருநாள் பயிற்சிப்பட்டறை
அண்மைய செய்திகள்

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

தை 21, 2026
முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது  உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்
அண்மைய செய்திகள்

முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

தை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்

4 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் 4 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

மட்டக்களப்பில் 4 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

6 நாட்கள் முன்னர்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

4 நாட்கள் முன்னர்
முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது  உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

2 நாட்கள் முன்னர்
சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் சிறிதரன் தீர்மானங்களை எடுக்கின்றார் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் சிறிதரன் தீர்மானங்களை எடுக்கின்றார் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In