EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
காரசாரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க…

காரசாரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க…

மார்கழி 8, 2024
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

ஆந்திரா என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது காரசாரமான உணவுகள்தான். பொதுவாக ஆந்திராவின் மிகவும் பிரபலமான உணவென்றால் ஹைதராபாத் பிரியாணிதான். ஆனால் ஹைதராபாத் பிரியாணி மட்டுமின்றி ஆந்திராவில் பல தனித்துவமான அசைவ உணவு வகைகள் உள்ளது. சிக்கனை ஆந்திர மக்கள் பல வழிகளில் சுவையாக சமைக்கிறார்கள். ஆந்திரா சிக்கன் குழம்பு என்பது கலர்புல்லான மற்றும் காரசாரமான சிக்கன் குழம்பாகும். இது இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு மட்டுமின்றி சாதத்துக்கு சூப்பராக இருக்கும். இந்த வார ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கமான சிக்கன் கிரேவி செய்யாமல் இந்த ஆந்திரா சிக்கன் கிரேவி செஞ்சா வீட்ல எல்லாரும் அசந்துருவாங்க. காரசாரமான ஆந்திர சிக்கன் கிரேவியை எப்படி செய்யலாமென்று பார்க்கலாம் வாங்க..

தேவையானப் பொருட்கள்:

– சிக்கன் – அரை கிலோ

– எண்ணெய் – 1 டீஸ்பூன்

– சோம்பு – 2 ஸ்பூன்

– இலவங்கப்பட்டை – 1 துண்டு

– சீரகம் – 1 ஸ்பூன்

– ஏலக்காய் – 4

– கிராம்பு – 4

– பிரியாணி இலை – 1

– பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது

– இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

– பச்சை மிளகாய் – 2

– கறிவேப்பிலை – சிறிதளவு

– மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

– மல்லித்தூள் – 2 டீஸ்பூன்

– மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

– சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

– கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்

– உப்பு தேவைக்கேற்ப –

வெண்ணெய் – 2 டீஸ்பூன்

– கொத்தமல்லி இலை – சிறிதளவு பொடியாக நறுக்கியது

செய்முறை:

– சிக்கனை முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

– அதன்பின் சிக்கனில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மசாலாப்பொடிகள், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் சிக்கனை ஊறவைக்கவும்.

– சிக்கன் நன்கு ஊறியதும், ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி நன்கு காய விடவும்.

– எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும், அதன்பின் கறிவேப்பிலையை அதில் போடவும்.

– பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும். – வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.

– வெங்காயம் வதங்கியதும் அதில் ஊறவைத்த சிக்கனை போட்டு நன்கு கிளறவும்.

– அதன்பின் ஒரு மூடிபோட்டு அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் நன்கு.வேகவைக்கவும்

– சிக்கன் இப்போது நன்கு தண்ணீர் விட்டிருக்கும். இப்போது நன்கு கிளறி அதில் கரம் மசாலா தூளை சேர்க்கவும் .

– சிக்கன் நன்கு வெந்து கொதி வந்ததும் அதில் வெண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கிளறவும்.

– தேவையான அளவு உப்பு சேர்த்து ருசி பார்த்து இப்போது அடுப்பை அணைக்கவும்.

– சூடான சுவையான ஆந்திரா சிக்கன் கிரேவி ரெடி… இதை சாதத்துடன் பரிமாறவும்…!

தொடர்புடைய செய்திகள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்  ஊதா நிற உணவுகள்
ஆரோக்கியம்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊதா நிற உணவுகள்

மார்கழி 16, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 22, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 18, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 15, 2025
உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்
அண்மைய செய்திகள்

உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்

ஆவணி 12, 2025
தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்
அண்மைய செய்திகள்

தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்

ஆவணி 10, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

வற்றாப்பளை வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிர்கொள்ளும் பொதுமக்கள்

வற்றாப்பளை வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிர்கொள்ளும் பொதுமக்கள்

6 நாட்கள் முன்னர்
வடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார் – தூதுவர் உறுதி

வடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார் – தூதுவர் உறுதி

3 நாட்கள் முன்னர்
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

5 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாண கடைத்தொகுதிக்கு  தீ வைப்பு

யாழ்ப்பாண கடைத்தொகுதிக்கு தீ வைப்பு

3 நாட்கள் முன்னர்
இலங்கை சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட  ஸ்கேனர்கள்

இலங்கை சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட ஸ்கேனர்கள்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In