தமிழரசு கட்சி ஒரே ஒரு கட்சியாக செயற்பட்டு 8 ஆசனங்களை பெற்றுள்ளது எனவே 7 கட்சியுடன் 8 வது கட்சியாக தமிழரசு கட்சி இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கருத்து ஏற்க முடியாது.
7 கட்சிகளாக செயற்பட்டிருந்தும் கூட ஒரு ஆசனத்தை மட்டுமே அவர்கள் கைப்பற்றியுள்ளனர் எனவே கட்சிகளின் எண்ணிக்கை முக்கியமானது அல்ல கட்சிகளுக்கு கிடைக்கப் பெறுகின்ற வாக்குபலம்தான் முக்கியமானது விடாகண்டம் குடாகண்டமாக இல்லாமல் சரியாக சிந்திக்க வேண்டும் என தமிழரசு கட்சி ஊடகபேச்சாளரும் நாடாளுடன்ற உறுப்பினருமான ஞா. சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழரசு கட்சி ஒற்றுமையை விரும்புகின்ற கட்சி கடந்த காலத்தில் உள்ளுராட்சி சபை தேர்தலில் நாங்கள் பிரிந்து செயற்படுகின்றோம் என்ற விடையத்தை சொல்லியிருந்தோம்.
மாகாணசபை மற்றும் பாராளுமன்ற தேர்ததில் இணைந்து செயற்படுவோம் என்ற கருத்தை தெரிவித்திருந்தோம. ஆனால் அதற்குள் அவர்கள் அவசரப்பட்டுக் கொண்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒன்றை உருவாக்கி நாங்கள் 7 கட்சிகள் ஒன்றாகிவிட்டோம் நீங்கள் ஒரு கட்சியாக இருக்கின்றதால் நீங்கள் எங்களுடன் வந்து இணையுங்கள் என நிபந்தனைகளை விதித்தனர்.
இதன்போது நாங்கள் அப்படி அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படலாம் என கருத்து சொன்னபோதும் அவர்கள் இல்லை நாங்கள் 7 கட்சிகள் இருக்கின்றோம் எனவே 7 கட்சிகளுடன் ஒரு கட்சிதான் வந்து இணைய வேண்டும் என கருத்தை முன்வைத்திருந்தனார்.
உண்மையில் தேர்தல் முடிந்த பின்னர் விளங்குகின்ற விளக்கம் என்னவென்றால் 7 கட்சிகளாக செயற்பட்டிருந்தால் கூட அவர்களால் ஒரு ஆசனத்தை கைப்பற்ற முடிந்திருக்கின்றது ஆனால் ஒரே ஒரு கட்சியாக செயற்பட்டிருந்த தமிழரசு கட்சி 8 ஆசனங்களை பெற்றுள்ளது ஆகவே கட்சிகளின் எண்ணிக்கை முக்கியமானது அல்ல கட்சிகளுக்கு கிடைக்கப் பெறுகின்ற வாக்குபலம்தான் முக்கியமானது அந்தடிப்படையில் அவர்கள் இந்த விடையத்தை தெளிவாக உணர்ந்திருப்பார்கள்.
இனிவரும் காலங்களில் எமது கட்சி கூடி தெளிவான ஒரு முடிவெடுக்கும், அந்த முடிவை அறிவிப்பேன், அதேவேளை நிபந்தனைகள் விதிப்பது 7 கட்சியுடன் 8 வது கட்சியாக இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளமுடியாது. வாக்கு பலத்தின் அடிப்படையில் எந்த கட்சியோடு எந்த கட்சி இணைய வேண்டும் என சிந்திக்கவேண்டும்.
அதேவேளை சிவஞானம் சிறீதரன் தலைமையில் 8 பேர் சென்று ஜனாதிபதியை சந்தித்தோம். அதன்போது தேசிய இனப்பிரச்சனையின் தீர்வினை நியாயமான அடிப்படையில் தீர்வை தரவேண்டும். காணிகள் விடுவிப்பு அதாவது பலதரப்பட்ட காணிகள் இராணுவத்தினராலும் குடியேறிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும், அதில் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை காணி, நீதிமன்ற தடையையும் மீறி ஆக்கிரமிப்பு அதனால் 5 இலட்சம் கால்நடைகள் மேச்சல் தரை இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தோம்
அத்துன் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கவேண்டும். அதனால் நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக இருக்கும் அப்பாவி கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனை தொடர்பாகவும் கல்முனைவடக்கு பிரதேச செயலகம் முழுமையாக்கி தரவேண்டும் அதேவேளை திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக பல தரப்பட்ட பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டது.
இதனைவிட வடக்கு கிழக்கில் அபிவிருத்தி விடையத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பின்தள்ளப்பட்டிருக்கின்ற பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை எனவும் அந்த அபிவிருத்தி விடையத்தில் ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற பேதம் இல்லாமல் எதிர்கட்சியில் இருக்கின்ற தமிழரசு கட்சிக்கும் விசேடமான நிதியை ஓதுக்கவேண்டும் என முன்வைத்தோம். அதனை ஜனாதிபதி அமைதியாகவும் சிநேக பூர்வமாகவும் அவதானித்து பதில்களை தந்துள்ளார்.
அதேவேளை இனப்பிரச்சனை தொடர்பாக புதிய அரசியல் யாப்பினை ஏற்படுத்த உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்த போது, நாங்கள் அந்த மாற்றத்தின் போது வடக்கு கிழக்கு இணைந்திருக்க வேண்டும் சமஷ்டி முறையிலான தீர்வு தேவை என்றபோது அவர் அரசியல் யாப்பு திருத்தம் வரும்போது கவனத்தில் கொள்ளுவோம் என தெரிவித்தது மட்டுமல்லாது தென்னிலங்கையில் இருக்கின்ற மக்களும் இந்த விடையத்தில் குழப்பமடையாத விதத்தில் அந்த தீர்வினை காணவேண்டும் என்றார்.
அதேவேளை ரில்வின் சில்வா 13 நீக்கவேண்டும் என தெரிவித்தார். ஆனால் ஜனாதிபதி வழக்கமாக இருக்கும் 13 திருத்தசட்டம் நடைமுறையில் இருக்கும். மாகாணசபை முறையில் எந்தவொரு அதிகாரமும் குறைக்கப்படவே அதிகரிக்கப்படவே முடியாது எனவே ரில்வின் சில்லா சொன்ன கருத்திற்கும் ஜனாதிபதி சொல்லும் கருத்திற்கும் இடையிலான முரண்பாடு இருக்கின்றது எனவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி சொல்லும் கருத்து உண்மையான கருத்தாகும்.
கடந்த காலத்தில் தென்னிலங்கை தலைவர்களால் இனப்பிரச்சனை மற்றும் தமிழர்களின் பல்வேறு பிரச்சனை தொடர்பாகவும் ஏமாற்றப்பட்டிருந்தோம் எனவே தென்னிலங்கை தலைவர்கள் செயற்பட்டு நடக்கின்ற பொழுதுதான் அவற்றை உண்மையான விடையங்களாக கருதமுடியும் கருத்துக்களை கருத்துக்களாக எடுத்துக் கொள்ள முடியும்.
இதேவேளை பாராளுமன்ற அரசியல் பேரவையில் எமது நா.உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்சியானது என்பதுடன் கடந்த காலத்தில் 144 ஆசனத்துடன் இருந்த மொட்டுகட்சி 3 ஆசனங்களை பெற்றிருக்கின்றதுடன் 3 ஆசனங்களுடன் இருந்த தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களை பெற்றுள்ளது. இந்த மாற்றம் என்பது தலைகீழான மாற்றம் என்பதுடன் இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முதலில் சிவப்பு கட்சியான இடதுசாரிகட்சியான தேசிய மக்கள் சக்தி ஆட்சியை பைகப்பற்றியுள்ளது என்றார்.