இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மற்றுமொரு கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கவனயீர்ப்பு பேரணி காக்கா கடை சந்திவரை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஊடகங்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது.











