EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மனித நேயமே இல்லாத இந்த நாட்டில் மனித உரிமைகளை நினைவு கூறுவதில் பிரயோசனமும் இல்லை.

மனித நேயமே இல்லாத இந்த நாட்டில் மனித உரிமைகளை நினைவு கூறுவதில் பிரயோசனமும் இல்லை.

மார்கழி 10, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(10) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படத்தை ஏந்தியவாறு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் சர்வதேச மனித உரிமைகள் தினம் எதற்காக நினைவு கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

மனித நேயமே இல்லாத இந்த நாட்டிலே மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என தெரிவித்தனர்.

கடந்த 15 வருட காலங்களாக காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்க நாங்கள் வீதியில் நிற்கின்றோம். உலக நாடுகள் என்றாலும் சரி,சர்வதேச நாடுகள் என்றாலும் சரி எமது நாடாக இருந்தாலும் சரி எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எவ்வித பிரயோசனமும் இல்லாமல் ஒவ்வொரு அம்மாக்களும் மன வேதனையுடன் உள்ளனர்.இன்று நூற்றுக்கணக்கான அம்மாக்கள் உயிரிழந்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கொண்டிக்கின்றவர்கள் தற்போது குறைவானவர்களாகவே இருக்கின்றோம்.

இருக்கிறவர்களும் இறப்பதற்கு முன்னர் எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் உறவுகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

மனித உரிமைகள் அமைப்புக்கள் பல இருந்தும் என்ன பலன்? என்ற கேள்வியை எழுப்பினர். எத்தனை மனித உரிமைகள் அமைப்புக்கள் இருந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் செயல்பாடுகள் இல்லை.

எங்களுக்காக கதைப்பதற்கும் ஒருவரும் இல்லை என தெரிவித்தனர். இந்த நிலையிலே சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கருப்பு தினமாக அனுஸ்ரிக்கின்றோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

தை 12, 2026
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

தை 12, 2026
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

தை 12, 2026
நைனாமடை பாலத்தினருகில் மிதந்த நிலையில் யுவதி சடலமாக மீட்பு!
இலங்கை

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

தை 12, 2026
மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

தை 12, 2026
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!
அண்மைய செய்திகள்

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

தை 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

லஞ்ச் சீட் பாவனைக்கு  தடை விதிப்பு

லஞ்ச் சீட் பாவனைக்கு தடை விதிப்பு

2 நாட்கள் முன்னர்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

10 மணத்தியாலங்கள் முன்னர்
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – மக்கள் அவதானம்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – மக்கள் அவதானம்

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

10 மணத்தியாலங்கள் முன்னர்
பாம்புக்கடிக்கு இலக்கான  இளைஞன் உயிரிழப்பு

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In