சளிப்பிடித்து வீட்டில் சிகிச்சை பெற்று வந்த 3 மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தை தெமடபிட்டிய தம்மிக்ககம பகுதியைச் சேர்ந்த எச்.ஜி. தில்ஹானி என்ற 3 மாத பெண் குழந்தையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் தென்னந்தும்புத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குழந்தை சளித் தொல்லை காரணமாக நீண்ட நாட்களாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளது. சம்பவ தினத்தன்று, குழந்தை பெற்றோருடன் வீட்டின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்துள்ள நிலையில் குழந்தையின் மூக்கில் இருந்து இரத்தம் மற்றும் பால் என்பன கசிந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.











