EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
முல்லைத்தீவு – தியோகுநகரில் அவலோன் நிறுவனம் தொடர்பான   வழக்கு ஜனவரி 23ஆம்திகதிக்கு ஒத்திவைப்பு.

முல்லைத்தீவு – தியோகுநகரில் அவலோன் நிறுவனம் தொடர்பான வழக்கு ஜனவரி 23ஆம்திகதிக்கு ஒத்திவைப்பு.

மார்கழி 12, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – தியோகுநகர்ப் பகுதியில் கடந்த 26.05.2024ஆம் திகதி கரைதுறைப்பற்றுப் பிரதேசசபைக்குரிய மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதியை, அவலோன் எனப்படும் தனியார் நிறுவனம் அடாவடியாக வேலியிட்டுத் தடுத்தமையால், அப்பகுதியை சேர்ந்ந பொதுமக்கள், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அடாவடியாக வீதியைத் தடுத்து அமைக்கப்பட்ட வேலியையும் அப்புறப்படுத்தியிருந்தனர்.

அந்தவகையில் இதுதொடர்பில் அவலோன் நிறுவனத்தின் முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு 12.12.2024இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் குறித்தவழக்கானது எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, சிலாவத்தை தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள தியோகுநகர் கிராமத்தில், கடந்த 26.05.2024 ஆம் திகதியன்று, கரைதுறைப்பற்றுப் பிரதேசசபைக்குரிய வீதியினை அவலோன் எனப்படுகின்ற தனியார் நிறுவனத்தினர் அடாவடியாக வேலிஇட்டுத் தடுத்திருந்தனர்.

இந் நிலையில் அவ்வீதியைப் பயன்படுத்துகின்ற தியோகுநகர் கிராமத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் பெரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

எனவே அவலோன் எனப்படும் தனியார் நிறுவனத்தின் இத்தகைய செயற்பாட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வீதியின் குறுக்காக அமைக்கப்பட்ட வேலியையும் அப்புறப்படுத்தியுமிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து குறித்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு கரைதுறைப்பற்று பிரதேசசபை மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக அதிகாரிகள் வருகைதந்து நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

அதன்பின்னர் கரைதுறைப்பற்று பிரதேசசபை, பிணக்குக்குரிய குறித்த வீதி தம்முடையதெனவும், அதுதொடர்பில் வர்த்தமானி அறிவித்தலும் வெளிவந்துள்ளதாகவும் கடிதத்தின் மூலமும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவ்வாறான சூழலில் அவலோன் தனியார் நிறுவன முகாமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் சமாதானக்குலைவு ஏற்படுத்தியதாகத் தெரிவித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தியோகுநகர்கிராம மக்கள் 12பேர், அவலோன் தனியார் நிறுவன முகாமையாளர் ஆகியோருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் பொலிசாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது டிசம்பர் 12 இன்றைய நாளுக்குத் திகதியிடப்பட்டிருந்தநிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தவகையில் வழக்கு எண் 61183 என்னும் வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில், நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கினை ஆராய்ந்த நீதிபதி, கரைதுறைப்பற்று பிரதேசசபை உரிமைகோரும் குறித்த வீதியினுடைய, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை குறித்த வழக்கானது எதிர்வரும் ஜனவரி 23இற்குத் திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

தை 12, 2026
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

தை 12, 2026
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

தை 12, 2026
நைனாமடை பாலத்தினருகில் மிதந்த நிலையில் யுவதி சடலமாக மீட்பு!
இலங்கை

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

தை 12, 2026
மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

தை 12, 2026
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!
அண்மைய செய்திகள்

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

தை 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

10 மணத்தியாலங்கள் முன்னர்
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – மக்கள் அவதானம்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – மக்கள் அவதானம்

3 நாட்கள் முன்னர்
இலங்கை சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட  ஸ்கேனர்கள்

இலங்கை சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட ஸ்கேனர்கள்

12 மணத்தியாலங்கள் முன்னர்
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

11 மணத்தியாலங்கள் முன்னர்
கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 10 பேர் காயம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In