EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
எலிக்காய்ச்சல் – ஆபத்து இலக்கினர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க ஏற்பாடு.

எலிக்காய்ச்சல் – ஆபத்து இலக்கினர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க ஏற்பாடு.

மார்கழி 13, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலமே இதனை தெரிவித்துள்ளார். குறித்த ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ் போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தற்போது மேற்படி காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இக்காய்ச்சல் தற்போது பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.

எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளது.

அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

தை 12, 2026
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

தை 12, 2026
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

தை 12, 2026
நைனாமடை பாலத்தினருகில் மிதந்த நிலையில் யுவதி சடலமாக மீட்பு!
இலங்கை

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

தை 12, 2026
மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

தை 12, 2026
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!
அண்மைய செய்திகள்

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

தை 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

எழுவைதீவில் தனியார் காணியை சுவீகரித்த கடற்படையினர்

எழுவைதீவில் தனியார் காணியை சுவீகரித்த கடற்படையினர்

11 மணத்தியாலங்கள் முன்னர்
ஓய்வு பெறும்  நில அளவையாளர் நாயகம்

ஓய்வு பெறும் நில அளவையாளர் நாயகம்

6 நாட்கள் முன்னர்
யாழில். கடலின் சீற்றம் அதிகரிப்பு

யாழில். கடலின் சீற்றம் அதிகரிப்பு

2 நாட்கள் முன்னர்
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – மக்கள் அவதானம்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – மக்கள் அவதானம்

3 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In