குடும்பதகராற்றில் சகோதரியின் கணவரான மச்சான் மீது கோடரி மற்றும் கூரிய ஆயதங்களால் தாக்குதலில் மச்சான் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (12) இரவு மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று இரவு 11.00 மணியளவில் சம்பத்தில் உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரனுடன் மது அருந்திவிட்டு அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கம் சண்டையாகமாறியதையடுத்து சகோதரியின் கணவர் மீது கோடாரி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தடவியல் பிரிவு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.











