வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் வனஜீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணியை செய்து வருகின்றார்.
இந்தநிலையில் நேற்றைய தினம் மாலை குறித்த இளைஞர் சேமமடு குளத்தின் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நீண்டநேரமாகிய நிலையில் அவரை காணாத நண்பர்கள் தேடியுள்ளனர்.
அவரது சடலம் இன்றுகாலை குறித்த ஆற்றுப்பகுதியில் இருந்து இளைஞர்களால் மீட்கப்பட்டது.
சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த நிரஞ்சன் என்ற அரச ஊழியரே சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.











