EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா.

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா.

மார்கழி 17, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும்,கண்காட்சியும் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை 8.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிழக்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மற்றும் திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை 8.30 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து பண்பாட்டு ஊர்திகள்,கலை ஆற்றுகைகள் பண்பாட்டு பவனியாக விழா மண்டபமான மன்னார் நகர சபை மண்டபம் நோக்கி வருகை தந்தது.

அதனைத் தொடர்ந்து வருகை தந்த விருந்தினர்களினால் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, பார்வையிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டு பெருவிழா நிகழ்வு கலைத் தவசி கலைஞர் (குழந்தை) செ.செபமாலை அரங்கில் தமிழ்த்தாய்க்கு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மலர் மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் .

அதனைத்தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து,மங்கள இசை,வரவேற்பு நடனம்,நடன நிகழ்வு, இசை நிகழ்வு, கண்டிய நடனம், றபான் நடனம், உழவர் நடனம், வாழ் நடனம் ஆகியவை இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டுப் பெருவிழாவையொட்டி வடந்தை – 2024 எனும் நூல் வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கலைக்குரிசில் விருது வழங்குதல்,2023 ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாண சிறந்த நூலுக்கான பரிசு வழங்குதல் மற்றும் இளங்கலைஞர் விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் –  வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்

தை 21, 2026
மீள பாடசாலைகள் ஆரம்பம்
இலங்கை

மீள பாடசாலைகள் ஆரம்பம்

தை 21, 2026
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்
இலங்கை

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்

தை 21, 2026
நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது
அண்மைய செய்திகள்

காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்த மாமானர் கைது

தை 21, 2026
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான  இருநாள் பயிற்சிப்பட்டறை
அண்மைய செய்திகள்

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

தை 21, 2026
முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது  உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்
அண்மைய செய்திகள்

முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

தை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா

4 நாட்கள் முன்னர்
முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது  உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

1 நாள் முன்னர்
செம்மணி புதைகுழி காணப்படும் இடத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது

செம்மணி புதைகுழி காணப்படும் இடத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது

2 நாட்கள் முன்னர்
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான  இருநாள் பயிற்சிப்பட்டறை

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

1 நாள் முன்னர்
வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In