EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வடக்கு கடற்தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்க கடற்தொழில் அமைச்சர் அக்கறையாக உள்ளார் – நா.வேதநாயகன்

வடக்கு கடற்தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்க கடற்தொழில் அமைச்சர் அக்கறையாக உள்ளார் – நா.வேதநாயகன்

மார்கழி 20, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சருக்கு பரிந்துரைக்கவுள்ளதாகவும் இவற்றை விரைந்து தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள், நெக்டா, நாரா நிறுவனப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.

இவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமரும் கலந்துகொண்டார்.

கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தின் பிரதான பொருளாதார வளமாக விவசாயம் மற்றும் மீன்பிடி என்பன இருக்கின்றது. அந்தத் தொழிலை முன்னெடுப்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டும்.

மீனவ சமூகங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வது தனக்குத் தெரியும். அவை தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, கடற்றொழில் அமைச்சருக்குப் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் அவர்கள், வடக்கு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றார். அவர் ஊடாக எதிர்காலத்தில் இங்கு அடையாளம் காணப்படும் விடயங்களை தீர்த்து வைக்க முடியும் என நம்புகிறேன் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

அதேவேளை குறித்த கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் கடலட்டைப் பண்ணைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் மீனவ சமூகப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.

அதனால் ஏற்படும் கடல்வளப் பாதிப்பு மற்றும் ஏனைய தொழிலை முன்னெடுக்கும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

இதேவேளை இதுவரை வழங்கப்பட்ட அனுமதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைகளை மீளாய்வு செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பரிந்துரையும் முன்வைக்கப்பட்டது.

மேலும் வடக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் பாதுகாப்புத் தரப்பினர் பாஸ் நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலும் மீனவ சமூகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். மீனவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

தை 12, 2026
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

தை 12, 2026
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

தை 12, 2026
நைனாமடை பாலத்தினருகில் மிதந்த நிலையில் யுவதி சடலமாக மீட்பு!
இலங்கை

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

தை 12, 2026
மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

தை 12, 2026
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!
அண்மைய செய்திகள்

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

தை 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – மக்கள் அவதானம்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – மக்கள் அவதானம்

3 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பில் திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது

11 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் உருவாக்கம்

வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் உருவாக்கம்

3 நாட்கள் முன்னர்
ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி அவசரமாக செப்பனிடப்படும் மன்னார் வீதி

ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி அவசரமாக செப்பனிடப்படும் மன்னார் வீதி

11 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In