கடந்த 10 நாட்களில் நாடளாவிய ரீதியில் 578 அரிசி விற்பனை குறித்து சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சில இடங்களில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட மட்டத்திலான அதிகாரிகளால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதன் பதில் பணிப்பாளர் நாயகம் திலகரட்ன பண்டா தெரிவித்தார்.











