வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் பல காலமாக சூட்சுமமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.
இன்று (21.12) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சேமமடு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்திருந்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 150,000 மில்லி லீற்றர் கோடா மற்றும் 150,000 மில்லி லீற்றர் வடி ஆகியன மீட்கப்பட்டதுடன் ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.











